Coffee:காபிக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கா? நிபுணர்கள் சொல்வது என்ன?
அடிக்கடி காபி குடித்தால் பித்தம் வரும், காபி குடித்தால் தலை நரைக்கும், உடல் எடை கூடும் என பல்வேறு பக்க விளைவுகளும் அடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காபியில் இருக்கும் கஃபைன் எனும் வேதிப்பொருள் பின்னால் ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉண்மையில் காபி குடித்தால் உடல் எடை கூடுமா? வாருங்கள் பார்ப்போம். உண்மையில் காபி குடிப்பதால் எடை கூடாது ஆனால் காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.
ஒரு கப் ப்ளாக் காபி அல்லது அதில் கொஞ்சம் பால் சேர்த்த காபி என்றால் அதில் உள்ள நன்மைகளை உடல் சீக்கிரம் கிரஹித்துக் கொள்ளுமாம். ஆனால் நீங்கள் இரவில் ஒரு கப் ஜாவா காபி குடித்தால் அது தவறுதான் எனக் கூறுகின்றனர்
ஹை கேலரி ஸ்வீட், ஃபேட்டி காபி ஆகியன ஆரோக்கியமான உணவிற்கு ஈடாகவே ஆகாது. இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் தான் நஞ்சு. ஏதோ ஒரு நாள் அத்தி பூத்தது போல் நீங்கள் உங்கள் காபியில் க்ரீம் சேர்த்து அருந்தினால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை. அதுவே அடிக்கடி அருந்த ஆரம்பித்தால் உடல் எடை கூடுவது நிச்சயம்.
தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபிதான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -