Coffee : காபிக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கா? இதை உடனே படிங்க பாஸ்..
தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபிதான். உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாபியில் இருக்கும் கஃபைன் எனும் வேதிப்பொருள் பின்னால் ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
உண்மையில் காபி குடித்தால் உடல் எடை கூடுமா? வாருங்கள் பார்ப்போம். உண்மையில் காபி குடிப்பதால் எடை கூடாது ஆனால் காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.
காபியில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய், எம்சிடி ஆயில் ஆகியனவற்றை சேர்த்து அருந்துவது கீட்டோ மற்றும் பேலியோ டயட் பின்பற்றுவோர் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இவற்றை அளவாக அருந்தாவிட்டால் உடல் எடை அதிகமாகும்.
ஆப்பிரிக்காவின் எதியோபியா தான் காபியின் தாய்நாடு. அராபிகா என்ற செடியில் இருந்து தான் காபி கொட்டைகள் எடுக்கின்றனர். அங்கே ஜெபேனா எனப்படும் மண் குவளையில் தான் காபியை தயாரிக்கின்றனர்.
இத்தாலி நாட்டில் காபி குடிப்பதை பூஜையைப்போல் செய்கின்றனர். காப்பசினோவை ஒரு போதும் இரவில் அருந்த மாட்டார்கள். காலை முதல் மாலை வரை தான் அங்கு காப்பசினோ அருந்தப்படுகிறது. இல்லாவிட்டால் பகல் பொழுதில் எஸ்ப்ரஸோ அருந்துகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -