Watermelon:மது அருந்துபவர்களா நீங்கள்..? தர்பூசணி பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தர்பூசணி பழத்தில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. உடலில் ஏற்கனவே நீர் சத்து அதிகம் இருக்கும் நபர்கள் இந்த தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் உடல் சோர்வு, கை, கால் வீக்கம் ஏற்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமது பழக்கம் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பாக மது அருந்தும் போது தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் என கூறுகின்றனர்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகம் காணப்படுகிறது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெயிலுக்கு இதமளித்தாலும் தர்பூசணி பழத்தை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பது தான் உண்மை.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் நீர்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அது சரியாக உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -