Water:தண்ணீர்.தண்ணீர்.. நீங்கள் குடிக்கும் நீர் குறித்த சில உண்மைகளும், பொய்களும்..!
உடலை ஹைட்ரேட் செய்து வைத்திருங்கள் என்பது பலரின் சுகாதார ஆலோசனையாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் எடையை குறைக்க தண்ணீர் உதவுகிறது என்பது உண்மையல்ல. தண்ணீருக்கு எடை குறைக்கும் குணம் கிடையாது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு நீர் ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது, அது தண்ணீருடன் எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் எடையை சாதகமாக பாதிக்கும்.
8 கிளாஸ் ஆஃப் வாட்டர்' அறிவுரை ஒவ்வொரு நாளும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையை பலர் கடைபிடிக்கின்றனர். இது சிலருக்கு வேலை செய்தாலும், அனைவருக்கும் ஹைட்ரேஷன் அளவு வேறுபட்டது.
இது ஒரு நபரின் செயல்பாட்டு நிலை, ஆரோக்கியம் மற்றும் உணவு முறை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
தண்ணீர் பசியைக் கொல்லும் என்பதும் உண்மையில்லை. ஆனால் எடை இழப்பு மேற்கொள்ள முயற்சி செய்யும் ஒரு நபர் உணவுக்கு முன் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்,
அதனால் அவர்களின் உணவு உட்கொள்ளும் அளவு குறைக்கப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் தானாகவே குறைந்த கலோரிகளை உட்கொள்ளத் தொடங்குகிறார்.மற்றபடி தண்ணீர் பசியைக் கட்டுப்படுத்தாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -