Coconut Milk Mutton Biriyani: மட்டன் பிரியாணியை இப்படி செய்து பாருங்க; ரொம்பவே சுவையாக இருக்கும்!
பிரியாணிதான் அதுவும் மட்டன் பிரியாணிதான் பலருக்கும் ஸ்பெஷலானது. அதுவும் தேங்காய்ப்பால் கலந்த மட்டன் பிரியாணி கூடுதல் நறுமணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் குக்கரில் மட்டனை போட்டு அதோடு கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.க்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, முந்திரி சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அகலமான பாத்திரத்தில் வெண்ணெய், நெய், எண்ணெய் மூன்றையும் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். வதங்கியதும், மிளகாய் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள பட்டை. கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளவும். அந்த கலவையில் எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், தயிர் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக எடுத்து வைத்துள்ள 4 கப் தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு மட்டன் வேக வைத்த தண்ணீரை இரண்டு கப்புகளாக எடுத்துக் கொண்டு அதையும் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு வேகவைத்த மட்டனையும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு, தேவையான அளவு உப்பு, புதினா இலைகள், கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து கலக்கவும். அந்த கலவை ஒரு கொதி வந்ததும் அரிசியை கழுவிக் கொட்டவும்.
பிரியாணி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை விதைகளை நீக்கிப் பிழிந்து விடவும்.பிறகு, தேவையான அளவு உப்பு, புதினா இலைகள், கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து கலக்கவும்.
அந்த கலவை ஒரு கொதி வந்ததும் அரிசியை கழுவிக் கொட்டவும். பிரியாணி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை விதைகளை நீக்கிப் பிழிந்து விடவும். பின் மீண்டும் தட்டு போட்டு மூடி பிரியாணி உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான தேங்காய் பால் மட்டன் பிரியாணி ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -