Food: கீரை சாப்பிட பிடிக்காதா உங்களுக்கு?அப்போ இனிமே இதையெல்லாம் சாப்பிடுங்க!
கீரை பிடிக்காதவர்களாகவோ இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் எங்கிருந்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைக் கண்டுபிடிப்பது என்ற கேள்விகள் உள்ளன அல்லவா. இதோ உங்களுக்காக இரும்புச்சத்து கொண்ட கீரை அல்லாத ஐந்து உணவுகள். இருப்பினும் கீரையை உணவில் சேர்த்துகொள்ள முயற்சி செய்யுங்க.
USDA தரவுகளின்படி, 100-கிராம் உலர் ஆப்ரிகாட்களில் 2.7 mg இரும்புச்சத்து உள்ளது. நீங்கள் அவற்றை சாலட்களில் தூவிவிட்டு சாப்பிடலாம், அல்லது மற்ற உலர்ந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சூப்பர் ஃபுட் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த சியா விதைகள் இரும்பு உட்பட அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் உடலுக்கு தருகிறது. யுஎஸ்டிஏ தரவுகளின்படி, 100 கிராம் சியா விதைகளில் 7.7 மில்லிகிராம் வரை இரும்பு தாது உள்ளது. இதனை வைத்து புட்டு போன்ற உணவுகள் செய்து உண்டு பயன்பெறலாம்.
00 கிராமுக்கு 7.6 மில்லிகிராம் இரும்புச்சத்தை கொண்டுள்ளது. அமராந்த் கோதுமை மாவுக்கு மாற்றாக பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ள முடிந்த பொருளாக உள்ளது.
00 கிராம் முந்திரி பருப்புகளில் 6.6 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கும். எனவே, உங்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்குப் பதிலாக முந்திரி பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரும்புச் சத்தை உடலுக்கு தருகிறது. யுஎஸ்டிஏ தரவுகளின்படி, ஒரு கப் பருப்பில் 6.6 மி.கி இரும்புச்சத்து உள்ளதாம்.