Oats Pakoda Recipe : பத்தே நிமிடத்தில் மொறுமொறுன்னு சத்தான ஓட்ஸ் பக்கோடா..இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப், வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை நறுக்கியது, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் பொரிப்பதற்கு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இதில் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
இதை 10 நிமிடம் ஓரமாக வைக்கவும்.
தேவையான அளவு எண்ணையை சூடு செய்து, பக்கோடா கலவையை போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் பக்கோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -