Eggs and Cholesterol: முட்டை சாப்பிடுவதால் கொழுப்பு அளவி அதிகரிக்குமா?
முட்டை விலை குறைவான சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். அதனால்தான் பள்ளிகளில் சத்துணவு தொடங்கி பெரும் பணக்காரரின் காலை உணவு வரை எல்லாவற்றிலும் முட்டை இடம் பெற்றுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
முட்டைகள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான். அதுமட்டுமல்லாமல் மிக எளிமையாக விதவிதமாக சமைக்கக்கூடியதும் கூட
அதேபோல் ஒரு வாரத்திற்கு ஒரு சர்க்கரை நோயாளி 12 முட்டை சாப்பிட்டால் கூட அது அவரது ரத்த கொலஸ்ட்ராலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முட்டையை தயக்கமின்றி சாப்பிடலாம். அதுவும் முட்டையை கீழே உள்ள ரெஸிபிக்களில் செய்து சாப்பிட்டால் அப்போது உடல் எடையைக் குறைக்கக் கூட செய்யலாம்.
முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
முட்டையின் மீது மிளகைத் தூவுவதும் ஆரோக்கியமானதே. மிளகில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -