Eggs and Cholesterol : முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் எகிறுமா? எத்தனை சாப்பிடணும்?
முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇருப்பினும் சிலருக்கு முட்டையால் கெட்டக் கொழுப்பு அதிகரிக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட ஆய்வுகள் பலவும் முட்டைக்கு இதயநாள நோய்களுக்கும் எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பு இல்லை என்று தெரிவிக்கிறது.
சிவிடி நோய் அபாயத்தை முட்டை ஏற்படுத்துவதாக உறுதியாகவில்லை என்று ஜஸ்டினா கோடோஸ் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல் ஒரு வாரத்திற்கு ஒரு சர்க்கரை நோயாளி 12 முட்டை சாப்பிட்டால் கூட அது அவரது ரத்த கொலஸ்ட்ராலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஆகையால் முட்டையை தயக்கமின்றி சாப்பிடலாம். அதுவும் முட்டையை கீழே உள்ள ரெஸிபிக்களில் செய்து சாப்பிட்டால் அப்போது உடல் எடையைக் குறைக்கக் கூட செய்யலாம்.
முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.. முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -