DIY Cleaning Powder: இந்த ஒரு பவுடர் போதும்; வீடு நன்றாக சுத்தமாகிடும் - எப்படி செய்வது?
வீட்டிலேயே க்ளினிங் லிக்விட் அல்லது பவுடர் தயாரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா, டிஷ்வாசிங் லிக்விட் அல்லது பவுடர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேக்கிங் சோடா, சோப் லிக்விட் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப இதை தயாரித்து கொள்ளலாம். 500 மிலி தயாரிக்க ஒரு கப் பேக்கிங் சோடா, அரை கப் சோப் லிக்விட் இரண்டயும் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
இதை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்பிரேயிங் பாட்டிலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சுத்தம் செய்ய வேண்டிய இடத்தில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.
பேக்கிங் சோடா இருப்பதால் இதை கைகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். கையுறை அணிந்து கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -