Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
DIY Shampoo: வீட்டிலேயே இயற்கையான தேங்காய் பால் ஷாம்பூ...செய்வது எப்படி?
இரசாயனம் அல்லாத ஷாம்பூவை தேங்காய்ப்பாலைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இந்த ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, பட்டுப்போன்ற, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை உங்களுக்கு வழங்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேங்காய் பால் ஷாம்பு செய்ய, அரை கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் 2 சொட்டு தேயிலை மர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் பால் ஷாம்பு செய்ய, முதலில் அரை கப் தேங்காய் பால் மற்றும் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் ஒரு மிக்ஸியில் சேர்த்துக் கிளறவும்.
இப்போது, இதனுடன் 2 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் வீட்டிலேயே இயற்கையான தேங்காய்ப் பால் ஷாம்பு தயார். இதனை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
தேங்காய் பால் ஷாம்பூவைப் பயன்படுத்த, வெதுவெதுப்பான நீரில் முடியை ஈரப்படுத்தவும். இப்போது தேங்காய் பால் ஷாம்பூவை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவி, பின் கைகளால் தலையை லேசாகப் 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, நன்கு துவட்டி உலர வைக்கவும்.தேங்காய் பால் ஷாம்பூவை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தி வர..
சிறப்பான பலன் கிடைக்கும், தலைமுடியும் நன்கு மெருகூட்டத்துடன் இருக்கும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -