DIY Incense Cone : செல்வ செழிப்பை அதிகரிக்கும் சாம்பிராணி கோனை இனி வீட்டிலேயே செய்யலாம்!
வீடுகளிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் ஊதுபத்தி, தூபம், சாம்பிராணி போடும் பழக்கம் பல காலமாக இருந்து வருகிறது.
நல்ல நறுமணத்தை கொடுக்கும் இந்த பொருட்கள் எதிர்மறையான ஆற்றல்களை அழிக்கும் என்பது நம்பிக்கை. இவை நல்ல எண்ணங்களையும் பண வரவையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த காலத்தில் சந்தைகளில் கிடைக்கும் தூபத்தில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும்.
நல்ல பொருட்களால் செய்யப்படும் தூபம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை அனைவராலும் வாங்க முடியாது. அதனால், இந்த தூபத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் காய்ந்த சாமந்தி இதழ்கள், காய்ந்த ரோஜா இதழ்கள், தேங்காய் நார், கிராம்பு, கற்பூரம், பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதில் பூக்களின் இதழ்களையும், தேங்காய் நாரையும்தான் அதிகமாக சேர்க்க வேண்டும். வாசனை பொருட்களை கொஞ்சமாக சேர்த்தால் போதும்.
இந்த அரைத்த கலவையில் ஒர்ஜினல் சந்தன பவுடரை சேர்க்க வேண்டும். அத்துடன் நெய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்று கிளற வேண்டும், இவற்றை முக்கோண வடிவில் பிடித்து வைக்க வேண்டும். ஒரு இரவு முழுவதும் இதை ஓரமாக வைத்தால், அவை காய்ந்து விடும். அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் இதை பயன்படுத்த தொடங்லாம்.