Coconut Milk Shampoo : தலைமுடி ஆரோக்கியமாக இருக்க தேங்காய் பால் ஷாம்பூ - எப்படி செய்வது?
தலைமுடி அதிகம் வறண்டு போகும் தன்மை உள்ளவர்கள் தேங்காய் பால் ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. இரசாயன பொருட்கள் எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களால் பக்க விளைவு ஏற்படாது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரசாயனம் அல்லாத ஷாம்பூவை தேங்காய்ப்பாலைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இந்த ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, பட்டுப்போன்ற, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை பெறலாம்
தேங்காய்ப்பாலில் இயற்கையாகவே ஈரப்பதம் இருப்பதால் கண்டிஷனர் தனியாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அப்படியே என்றாலும், கற்றாழை ஜெல் கண்டிஷனராக பயன்படுத்தலாம். எனவே வீட்டிலேயே தேங்காய் பால் ஷாம்பு தயாரிப்பதற்கான முறை எளிதானது தான்.
தேங்காய் பால் ஷாம்பு செய்ய, அரை கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் 2 சொட்டு தேயிலை மர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் பால் ஷாம்பு செய்ய, முதலில் அரை கப் தேங்காய் பால் மற்றும் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் ஒரு மிக்ஸியில் சேர்த்துக் கிளறவும். இப்போது, இதனுடன் 2 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் வீட்டிலேயே இயற்கையான தேங்காய்ப் பால் ஷாம்பு தயார். இதனை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
தேங்காய் பால் ஷாம்பூவைப் பயன்படுத்த, வெதுவெதுப்பான நீரில் முடியை ஈரப்படுத்தவும். இப்போது தேங்காய் பால் ஷாம்பூவை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவி, பின் கைகளால் தலையை லேசாகப் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடிய அலசவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -