Diwali 2023: தீபாவளி பிறந்த கதை! புராணங்களில் உள்ள காரணங்கள் இதோ!
பொதுவாக தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்தததற்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. பூலோகத்தையும், விண்ணுலகத்தையும் ஆட்சி செய்த நரகாசுரன் தொடர்ந்து ஏற்படுத்திய அநீதியை அடுத்து, இந்திரன் முறையிட்ட காரணத்தால் கிருஷ்ண பகவான் நடத்திய லீலையில் சத்திய பாமா நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரம் ராமர் அவதாரம் ஆகும். சீதையை மீட்பதற்காக இலங்கை சென்று ராவணனை வதம் செய்த ராமர், மீண்டும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்றும், அந்த நாளையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடடுவதாகவும் கூறப்படுகிறது..
மகாபாரதத்தில் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்வார்கள். பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிதையே தீபாவளி..
தேவர்கள் – அசுரர்கள் இணைந்து பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து மகாலட்சுமி தேவி தோன்றினார். அவரை மகாவிஷ்ணு திருமணம் செய்த நாளே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், இருளை நோக்கி வாழ்வில் ஒளியைத் தரும் பண்டிகையே தீபாவளி என்று மக்களால் நம்பப்படுகிறது.
நிம்மதி நிலைத்திருக்கட்டும்.. இனிய தீபாவளி வாழ்த்துகள்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -