Diwali 2023: 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி! என்ன விசேஷம்!
தீபாவளியானது வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதீபாவளி பண்டிகையின் முதல் நாளான திரியோதசி திதியில் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தந்தேராஸ் நாளானது லட்சுமி தேவி அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆயுர்வேத கடவுளான தன்வந்திர பகவான் அவதரித்த நாளாகவும் இந்த தந்தேராஸ் கருதப்படுகிறது. வட இந்தியாவில் தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உயர்ந்த பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளே சோட்டி தீபாவளி ஆகும். வட இந்தியாவில் இந்த நாளை நகர சதுர்த்ததி என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் வீட்டை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.
தீபாவளி பண்டிகையில் லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த பூஜையானது மாலை நேரத்தில் செய்யப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, அன்பளிப்புகளை ஒருவருக்கு ஒருவர் வழங்குவார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் பண்டிகை கோவர்த்தன பூஜை ஆகும். கிருஷ்ண பரமாத்மாவை போற்றும் விதமாக கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் கடைசி நாளான இந்த 5ம் நாள் பாய் தூஜ் என்று கொண்டாடப்படுகிறது. அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -