Diwali Decoration Ideas: தீபாவளி வந்தாச்சு; வீட்டை ரம்மியமாக அலங்கரிக்க சில டிப்ஸ்!
தீபங்களால் ஒளிரும் நாள் தீபாவளி; தீபாவளி அன்று மாலை விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் ரம்மியமாக இருக்கும். உறவுகள் சூழ தீபத்துடன் கதைப் பேசி கொண்டாடலாம். மண் விளக்குகள், எலக்ர்டிக் வண்ண மின் விளக்குகள் என எதுவானும் உங்க சாய்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடைகளில் கிடைக்கும் காகித அலங்கார விளக்குகளை வாங்கி உங்கள் வீடுகளை அலங்கரிக்கலாம்.
இரவு நேரங்களில் குடும்பத்துடன் உணவருந்தும்போது, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். தண்ணீருக்குள் மிதக்கும் மெழுகுவர்த்திகளை வாங்கலாம். கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி குடுவை அல்லது டம்ளரில் தண்ணீர் நிரப்பில் அதில் மிதக்கும் மெழுகுவர்த்திகளை எரியவிடலாம்
தீபாவளி அன்றைக்கு முந்தைய நாளே வீட்டை அலங்கரித்து வைப்பது நல்லது. மலர் அலங்காரம் இல்லாமல் மற்ற தோரணங்கள், வண்ண பெயிண்ட்களால் கோலம் வரைதல் உள்ளிட்டவற்றை முந்தைய நாளே செய்துவிடலாம்.
தோடு மெழுகுவத்தி Fragrance oils burner கடைகளில் கிடைக்கும். லேவண்டர், மல்லிகை, லெமன்கிராஸ் உள்ளிட்ட எண்ணெய் அறையை நல்ல நறுமனத்துடன் வைக்க உதவும்.
மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ரோஜா மலர்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டின் முக்கியமான பகுதிகளில் பூக்களை கொண்டு கோலம் வரையலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -