Wheat Momos : கோதுமை மாவில் சுவையான மோமோஸ்... செய்முறை இதோ!
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கோதுமை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.இந்த உருண்டையின் மீது எண்ணெய் தடவி மூடி வைத்து விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சோம்பு, நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம், துருவிய கேரட் 3 ஸ்பூன், முட்டைக்கோஸ் அரை கப் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும், இதனுடன் சிறிது இஞ்சி- பூண்டு விழுது 1 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் சிறிது மஞ்சள் தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா, சேர்த்து மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
பிசைந்து வைத்த மாவில் இருந்து மீடியம் சைஸ் உருண்டை எடுத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டிக் கொள்ள வேண்டும். இதனுள் தயாரித்து வைத்துள்ள கலவையை இரண்டு ஸ்பூன் அளவு வைத்து மோமோஸ் போன்று மடித்துக் கொள்ளவும்.
இதை உள்ளங்கையில் வைத்து கட்லெட் போன்று தட்டிக் கொள்ள வேண்டும். அப்போது தான் குறைவான எண்ணெயில் பொரித்து எடுக்க முடியும்.
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக் கொள்ளவும். 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். இதை அப்படியே சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -