Dates Health Benefits : பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள் என்னென்ன?
பேரீச்சம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 5-6 பேரீச்சம்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை வராமல் இருக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேரீச்சம்பழத்தில் கரோட்டினாய்டுகள், பீனாலிக்ஸ், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் ஆபத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது.
பேரிச்சம்பழத்தில் கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்ற கலவைகள் உள்ளன. புதிய மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் அறிவாற்றலை மேம்படுத்தலாம்
பேரீச்சம்பழத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள், ஆண்களின் இனப்பெருக்க அமைப்பை ஆதரிக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஸ்டெரால்கள் போன்ற ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது. அத்துடன் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் இது நல்லது.
பேரிச்சம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கி சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என சொல்லப்படுகிறது
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்க உதவலாம். இதில் இருக்கும் இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை, தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை, தாய்மார்களின் சோர்வை போக்குகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இதனை எடுத்துக்கொள்ளவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -