Glowing Skin Tips : பளிச் சருமம் வேண்டுமா? இந்த பானத்தை குடித்து பாருங்க!
தனுஷ்யா | 16 Mar 2024 01:41 PM (IST)
1
பலருக்கும் அழகான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொலிவான சருமம் வேண்டுமென்றால், பல விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
2
முதலில், குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடலை சுத்தமாக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானத்தை பற்றி இங்கு காணலாம்
3
தேவையான பொருட்கள் : 6 வேப்பிலை, 6 புதினா, கொஞ்சம் கொத்தமல்லி, அரை எலுமிச்சை, சிறிது இந்துப்பு, சிறிது சாட் மசாலா
4
முன்குறிப்பிட்ட மூன்று இலைகளையும் மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும். அத்துடன் எலுமிச்சை, இந்துப்பு, சாட் மசாலா சேர்த்து, 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.
5
இதை நன்கு அரைத்து வடிக்கட்டி, வெறும் வயிற்றில் வாரத்திற்கு 2 நாள் குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
6
அழகான சருமத்தை பெற சீரான உணவுமுறை, உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உறக்கம் ஆகியவையும் முக்கியம். ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.