Broccoli Cheese Balls : ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுப்பர் ரெசிபி இதோ!
ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 4,ப்ரோக்கோலி - 1 கப், வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி ஃப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரட் தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய், சீஸ் க்யூப்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை நன்றாக மசிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய ப்ரோக்கோலியைச் சேர்க்கவும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை தயாரானதும், பிரட் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி, ப்ரோக்கோலி கலவையிலிருந்து உருண்டைகளை தயார் செய்யவும்.
இப்போது ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து நடுவில் ஒரு சீஸ் க்யூப் வைக்கவும். சீஸ் க்யூப்பை ப்ரோக்கோலி கலவையுடன் மூடி, மீண்டும் உருண்டை பிடிக்கவும். மற்ற உருண்டைகளிலும் இதே போல் செய்ய வேண்டும்.
அனைத்து ப்ரோக்கோலி உருண்டைகளையும் ப்ரெட் கிரம்ப்ஸில் கோட் செய்து ஒதுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் போதுமான அளவு சூடானதும், ப்ளேமை மிதமாக வைத்து, ப்ரோக்கோலி உருண்டைகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும், பின்னர் கடாயில் இருந்து அகற்றவும். சுவையான ப்ரோக்கோலி சீஸ் உருண்டைகளை தக்காளி கெட்ச் அப் அல்லது காரமான மயோனைஸுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -