Dates Benefits : பேரிச்சம்பழத்தில் இவ்வளவு சத்துகள் இருக்கா? தினமும் ஒன்னு சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா?
நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.
, ஒழுங்கற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்துவதிலும் பேரிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.
இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் பேரிச்சம்பழம் உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
பேரிச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாகப்படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுசேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது.
இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.
குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். பேரிச்சம்பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -