Egg pudding recipe: மூன்றே பொருட்கள் இருந்தால் போதும்.. சுவையான எக் புட்டிங்கை வீட்டிலேயே செய்யலாம்!
எக் புட்டிங் செய்ய இனி பெரிய லிஸ்ட் போட வேண்டாம். மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும் சுவையான எக் புட்டிங் செய்யலாம். இதோ இந்த சிம்பில் ரெசிபியை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: முட்டை 2, பால் 200 மிலி, சர்க்கரை 2 டேபில் ஸ்பூன். கேரமெல் செய்ய: சர்க்கரை 4 டேபில் ஸ்பூன், தண்ணீர் 3 டேபில் ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு பவுலில் முட்டையை உடைத்து, பால் மற்றும் 2 டேபில் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்து விட வேண்டும்.
பிறகு ஒரு பேனில் சர்க்கரை 4 டேபில் ஸ்பூன், தண்ணீர் 3 டேபில் ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.கட்டியான கேரமெலை ஒரு பவுலில் ஊற்றி அதன் மேல் முட்டையை கலவையை ஊற்றி கொள்ளவும்.
அதன் பிறகு அந்த பவுலை ஒரு கவர் கொண்டு மூடி அதில் சிறு சிறு ஓட்டைகள் போட்டு இட்லி தட்டில் அந்த பவுலை வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு சிறுது நேரம் குளிரூட்டி எடுத்தால், அவ்வளவு தான் டேஸ்டியான முட்டை புட்டிங் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -