Curly haircare tips: சுருட்டை சுருட்டையான கேஷம் வேண்டுமா..? இதையெல்லாம் செய்யுங்க!
காலம் காலமாக மாறாத ஒன்று, நேரான கூந்தல் இருக்கும் பெண்கள் சுருட்டையான கூந்தலுக்கு ஆசைப்படுவதும் சுருட்டையான கூந்தல் உடைய பெண்கள் நேரான கூந்தலுக்கு ஆசைப்படுவதும்தான். என்ன தான் இருந்தாலும் சுருட்டையான கூந்தல் ஒரு தனி அழகு தான். இயல்பில் சுருட்டையான உங்கள் கூந்தல் வரண்டு மோசமாக இருக்கிறதா? இதோ இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
முதலில் உங்கள் கூந்தலுக்கு ஏற்ற எண்ணெய்யை டபுல் பாய்லிங் முறைப்படி சூடேற்றி தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு உங்கள் கூந்தலுக்கு உகந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி குளிக்க வேண்டும். எண்ணெய் நன்றாக போவதற்கு இரண்டு முறை ஷாம்புவை தண்ணீரில் கலந்து உபயோகிக்க வேண்டும்.
மேலும், கண்டிஷனரை கூந்தலில் தடவி ஸ்க்ரன்ச் செய்து முன்று நிமிடங்கள் கூந்தலில் விட்டு நன்றாக குளித்து விட வேண்டும்.
பிறகு கூந்தல் லேசான ஈரத்தோடு இருக்கும் பொழுது Curl cream தடவி மறுபடியும் ஸ்க்ரன்ச் செய்யவும். உங்கள் கூந்தலுக்கு ஏற்ற Curl cream பயன்படுத்துவது நல்லது.
இதையும் தாண்டி சாட்டின் தலையனை பயன்படுத்துவது உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
கூடுதலாக 2-3 முறை ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும். ஸ்கால்ப் சுத்தமாக இருக்க டீடாக்ஸ் ஸ்கரப்பை பயன்படுத்தவும்.