Cooking Tips : மிருதுவான ராகி சப்பாத்தி.. அருமையான சைவ குருமா.. இப்படி செய்தால் பக்காவாக இருக்கும்!
ஆம்லேட் செய்யும் போது, முட்டை கலவையுடன் 1 ஸ்பூன் பால் சேர்த்தால் அது புசுபுசுவென வரும்
ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு தேங்காய் தண்ணீர் விட்டு அரைத்தால், ஆப்பம் மென்மையாக இருக்கும்
காய்கறி குருமாவில் காரம் அதிகமாகி விட்டால், அதில் சிறிதளவு வெண்ணெயை உருக்கி சேர்த்தால் காரம் குறையும்
தயிர் பச்சடி செய்யும் போது, நீர்த்துப் போய்விட்டால் கொஞ்சம் வேர்க்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாக மாறிவிடும்
புளி சாதம் செய்யும் போது, அதில் சிறிதளவு மிளகு பொடி தூவி சாதத்தை கலந்துவிட்டால் புளியோதரை சுவையாக இருக்கும்
ராகி சப்பாத்தி செய்யும்போது, 1 கப் கோதுமை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் மிருதுவாக இருக்கும்
பாசிப்பருப்பு, துவரம் பருப்பை கடாயில் லேசாக வறுத்து விட்டு, பிறகு வேகவைத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் சீக்கரம் கெடாமல் இருக்கும்