Cooking Tips : உருளைக்கிழங்கு சிப்ஸ் நீண்ட நாட்களுக்கு மொறுமொறுவென இருக்க இதை செய்யுங்க!
அனுஷ் ச | 05 Sep 2024 09:14 AM (IST)
1
வெண்டைக்காய் வேக வைக்கும் போது பாத்திரத்தை சிறிதளவு திறந்து வைத்தால் காய் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்
2
கோதுமை தோசை செய்யும் போது வெங்காயம் பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் எண்ணெயில் வதக்கி மாவுடன் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்
3
ரவையை நெய் சேர்த்து வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து பிறகு கேசரி செய்தால் சுவையாக இருக்கும்
4
வெந்தயக்கீரை செய்யும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது
5
இடியாப்ப மாவு பிசையும் போது முக்கால் பங்கு தண்ணீர், கால்பங்கு பால் ஊற்றி மாவு பிசைந்து ஆவிகட்டினால், இடியாப்பம் பஞ்சு போல வரும்
6
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவு தூவி சிப்ஸ் செய்தால் சிப்ஸ் மொறு மொறுவென இருக்கும்.