Vitamin Deficiency : வைட்டமின் குறைபாடுகளும் அதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளும்!
வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண் பார்வை சரியாக தெரியாது, சருமம் வறண்டு காணப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் பி2 குறைபாடு இருந்தால் வாயின் ஓரத்தில் பிளவுகள் ஏற்படும், தொண்டை புண் ஏற்படும். வைட்டமின் பி6 குறைபாடு இருந்தால் கோவம் வரும், சருமத்தில் வீக்கம் ஏற்படும். வைட்டமின் பி9 குறைபாடு இருந்தால் இரத்த சோகை ஏற்படும், கவனச்சிதறல் ஏற்படும். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் புண்கள் பொறுமையாக ஆறும், ஈறுகளில் இரத்தம் கசியும்.வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்புகளில் வலி ஏற்படும். தசையில் வலி ஏற்படும், மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
வைட்டமின் ஈ குறைபாடு இருந்தால் தசைகள் பலவீனமாக இருக்கும், கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் வரும்.
வைட்டமின் கே குறைபாடு இருந்தால் காயம் ஏற்பட்டால் அதிகமாக இரத்தம் கசியும், இரத்தக்கட்டு ஏற்படும், எலும்புகள் பலவீனமாக இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -