Gulab Jamun : குண்டு குண்டு குலாப் ஜாமுன் இப்படி செய்து பாருங்க அசத்தலாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : இனிப்பில்லாத கோவா - 200 கிராம், பன்னீர் - 200 கிராம், மைதா - 4 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி, சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் - 500 மில்லி , ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
செய்முறை: முதல் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் , ரோஸ் வாட்டர் சேர்த்து பாகு தயாரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் கோவா, பனீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதன் பின் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிசைந்த மாவை உங்களுக்கு ஏற்ற அளவில் மாவை உருண்டை பிடித்து கொள்ளவும். உருட்டிய மாவுகளை ஒரு துணியால் 15 நிமிடத்திற்கு மூடி வைத்துக் கொள்ளவும்.
அடுத்தது பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய மாவுகளை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
கடைசியாக பொரித்து எடுத்த ஜாமுன்களை பாகில் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் அட்டகாசமான குலாப் ஜாமுன் தயார்