Fish Cooking Tips: சொதப்பாமல் மீன் சமைக்கணுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!
ன் சமைப்பதில் நான் மாஸ்டர் எனச் சொல்லும் பலரும் கூட இந்த மாதிரியான தவறினை செய்துவிடுவார்கள். இந்த தொகுப்பில் மீன் சமைக்கும்போது கவனத்தில்கொள்ளவேண்டிய 6 டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுதிய மீன்களை வாங்கவேண்டும். கண்கள் நன்கு பலபலவென இருக்கும் மீன்களையும், உறுதியான உடல் கொண்ட மீனையும் வாங்க வேண்டும்.
மீன் அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் சமைப்பது ருசியான உணவை தயார் செய்ய உதவியாக இருக்கும்.
பாத்திரம் நன்கு சூடான பின்னரே மீனை பாத்திரத்தில் போட வேண்டும். இல்லையென்றால் மீனின் அமைப்பு சிதைவதுடன் உண்பவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மீனை வறுக்கும் போது கடாயில் போட்ட பின்னர் மீனை உடனே திருப்பக்கூடாது. மீனின் ஒரு பகுதி வேகும் வரை நேரம் கொடுக்க வேண்டும். உடனே திருப்பிக்கொண்டு இருந்தால் மீனின் அமைப்பு சிதைந்து விடும்.
ஒரு மீன் வேக 5 முதல் 7 நிமிடங்கள் போதும். அது மீனின் வகையைப் பொறுத்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -