Coconut Dosa Tomato Gravy:சுடச்சுட தேங்காய் தோசை மற்றும் சுவையான தக்காளி குழம்பு - ரெசிபி!
1 கப் இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரை கப் துருவிய தேங்காயை இதில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப் சாதம் சேர்த்து 2 நிமிடம் அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் 1 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 10 முதல் 12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வழக்கம் போல் தவாவை சூடு செய்து அதில் சற்று தடிமனாக தோசை ஊற்றி மூடி போட்டு ஒரு பக்கம் மற்றும் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசை பஞ்சு போன்று மெது மெதுவென இருக்கும்.
இப்போது இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை மற்றும் இரண்டு கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பொடியாக நறுக்கிய 6 பெரிய தக்காளியை எண்ணெயில் சேர்க்க வேண்டும். இதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 30 நொடிகள் இதை நன்றாக கலந்து விட வேண்டும்.
இதை லேசான தீயில் 3 நிமிடம் மூடி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் கால் கப் துருவிய தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை தாக்காளி குழம்பில் சேர்த்து மிக்ஸி ஜாரை அலசிய சிறிது தண்ணீரையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -