Chicken Kothu Idiyappam : கெடுதலான புரோட்டா இனி வேண்டாம்.. அதற்கு பதில் சிக்கன் கொத்து இடியாப்பத்தை ட்ரை பண்ணுங்க!
எளிதில் ஜீரணமாகும் இடியாப்பத்தை அனைவருக்கும் பிடிக்கும். இது தெருவில் உள்ள கடைகளில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்யும் இடியாப்பம் இன்னும் சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇடியாப்பம் - பால், இடியாப்பம் - குருமா, இடியாப்பம் சால்னா, இடியாப்பம் பாயா என பல ஃபேமஸ் காம்போ உள்ளன. இந்த வரிசையில், சிக்கன் கொத்து இடியாப்பத்தின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள் : இடியாப்பம் - 6 , முட்டை - 2, வெங்காயம் - 2 தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு, சிக்கன் துண்டுகள், சிக்கன் கிரேவி - 1/2 கப் கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை, கல் உப்பு, எண்ணெய்.
செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
இந்த வதக்கிய கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். இதனுடன் மிளகு தூள்,வேகவைத்த சிக்கன் துண்டுகள், இடியாப்பம், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். எச்சில் ஊறவைக்கும் சுவையான சிக்கன் கொத்து இடியாப்பம் தயார்.
கெடுதல் விளைவிக்கும் கொத்து புரோட்டாவை தவிர்த்து, இனி இது போன்ற உணவுகளை ட்ரை செய்து பாருங்கள்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -