Onion Samosa: மொறு, மொறு வெங்காய சமோசா ரெசிபி!
ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மல்லி தூள் சேர்த்து, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.
வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையில் சிறிதளவு வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான வெங்காய சமோசா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -