Chana Dal Kachori : சென்னா தால் கச்சோரி செய்யுறது இவ்ளோ ஈசியா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க....
கச்சோரி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். மாவு மிருதுவாக வரும் வரை பிசைய வேண்டும். இந்த பிசைந்த மாவை ஈரமான துணியால் மூடி வைக்கவும். இதை அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்கிடையில், சென்னா பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கச்சோரி பூரணத்தை தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து சூடாக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி சேர்க்கவும். சில நிமிடங்கள் இதை வதக்க வேண்டும். பின்னர் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, கீல் (hing) மற்றும் தானியா தூள் உட்பட அனைத்து உலர்ந்த மசாலாக்களையும் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விட்டு, சுமார் 5-7 நிமிடங்கள் இதை வேக விட வேண்டும்.
இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட வேண்டும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவற்றை உருண்டைகளாக பிடிக்கவும். அவற்றை உருட்டி அதில் மசாலாவை ஸ்டஃப் செய்து அழகான வட்ட வடிவில் வடிவமைக்க வேண்டும்.
அவற்றை மெதுவாக எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான சென்னா தால் கச்சோரி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -