Carrot Coriander Juice: பளபளப்பான இளமையான சருமம் வேண்டுமா? கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குடிங்க!
க்ளீயரான சருமத்தைப் பெறலாம். இப்போது நாம் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். கேரட் -கொத்தமல்லி பானத்தின் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகின்றோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇது கொலஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சருமத்தை வலுப்படுத்த கொலஜன் அவசியம். இந்த பானத்தில் சிறிய அளவில் கொத்தமல்லி பயன்படுத்தினால் சருமத்திற்கு தேவையான விட்டமின் கிடைக்கும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது , இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். இந்த சாறு மற்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது
இந்த சாற்றில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். அதே வேளையில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி இலைகளும், கேரட்டில் உள்ள அதிக வைட்டமின் ஏ-வும் சேர்ந்து உங்கள் சரும அழகை மேம்படுத்தும்.
கேரட் மற்றும் கொத்தமல்லி சாறின் பண்புகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இந்த பானத்தின் நச்சுத்தன்மை நீக்கும் மற்றும் ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் குடல் ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது
இந்த சாறு கண் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் என சொல்லப்படுகிற்து. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இந்த கேரட் ஜூசை குடித்து நீங்கள் பயன்பெறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -