Carrot Cake: ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்ஸ்;கேரட் கேக் - ரெசிபி இதோ!
வால்நட்ஸை கொர கொரவென பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கோதுமை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பவுலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.
அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவு ஆகியவற்றை சேர்த்து, வால்நட்ஸை பொடித்து போட்டு, கட்டிப்படாதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை பரப்பி, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்ற வேண்டும்.
மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்
ஓவனில் வைத்து 5லிருந்து 10 நிமிடம் வரை பேக் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையான சாஃப்டான கேரட் கேக் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -