Cannes 2023: 'கான்' திரைப்பட விழாவில் மஞ்சள் தேவதையாக மாறிய மௌனி ராய்..!
தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்து கலக்கி வருபவர் மௌனி ராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான மௌனி ராய், இந்தத் தொடர் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார்
சென்ற ஆண்டு ஜனவரி 27ம் தேதி தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்டை திருமணம் செய்து கொண்ட மௌனி ராய், அதன் பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இறுதியாக பிரம்மாஸ்திரா படத்தில் இவர் நடித்த ஜூனூன் கதாபாத்திரத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கான் விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகை மௌனி ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான் திரைப்பட விழா, கடந்த மே 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கான் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் இந்தியப் பிரபலங்கள் கலந்துகொண்டு தொடர்ந்து இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் வருகின்றனர்.
நடிகை மௌனி ராய் மஞ்சள் நிற உடை அணிந்து கலக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. முதன்முறையாக மௌனி ராய் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி மௌனி ராயை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -