Broccoli Carrot Soup: ப்ரோக்கோலி - கேரட் இருந்தால் போதும்; சூப் செய்து பாருங்க!
வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில் இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம்.
கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், ப்ரோக்கோலி, கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொத்க்க விடவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைத்தால் ப்ரோக்கோலி சூப் ரெடி..
ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -