அவித்த முட்டை vs ஆம்லெட்.. எது சிறந்தது?
புரதத்தின் சிறந்த ஆதாரமாக எப்போதும் கருதப்படுவது முட்டை. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
பல நல்ல ஊட்டச்சத்துகளில் ஒன்றான வைட்டமின் டி அதிகளவில் அவித்த முட்டைகளில் உள்ளது. ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 6% வைட்டமின் டி உள்ளது என்று அதிகாரப்பூர்வ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றன.
காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஆம்லெட்டுகள் நார்ச்சத்துக்கான சிறந்த காரணியாகும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவை செரிமான செய்ய நார்ச்சத்து அவசியம். மேலும் இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவும்.
காய்கறியுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வைட்டமின் சி-ஐ அதிகளவில் தருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட் இரண்டும் ஊட்டச்சத்து நன்மைகளின் சிறந்த ஆதாரமாகும். உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க விரும்பினால், உங்கள் காலை உணவுக்கு வேகவைத்த முட்டை ஒரு சிறந்த வழி.
பலவிதமான சத்துக்கள் நிறைந்த சத்தான காலை உணவை நீங்கள் விரும்பினால், ஆம்லெட் சாப்பிடலாம்.