Sun Melon : இதயம் முதல் ஜீரண மண்டல நலன் வரை- முலாம்பழம் செய்யும் மாயம்..
இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழம் கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது. இதில் கோடை காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
முலாம்பழத்தில் உள்ள அடினோசைன் மற்றும் பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கும். பொட்டாசியம் உடலுக்கு சோடியத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அடினோசைன் என்பது ரத்தம் உறைதலைத் தடுத்து இதய நாளங்களைப் பாதுகாக்கும்.
முலாம்பழத்தில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. இது முடி உதிர்தலைத் தடுத்து முடி வளர உதவுகிறது. இதை சாப்பிடுவதோடு பழக்கூழாக்கி தலையில் நேரடியாக தேய்த்துக் குளிக்கலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாது.
முலாம்பழத்தில் பீட்டா கரோடீன் இருப்பதால் அது கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோடீனில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
கடைசியாக முலாம்பழம் ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும். இதை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கும், கேஸ் பிரச்சனை குறையும் கூடவே அசிடிட்டி பிரச்சனையும் நீங்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -