Cloves: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
கிராம்பு பூக்கள், கிராம்பு எண்ணெய், கிராம்பு பொடி போன்றவை நிறைய நன்மைகளைத் தருகின்றன. கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது என்று ஆயுவேதம் சொல்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிராம்பு வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நன்மைகளை வழங்குகிறது. கிராம்பு எண்ணெயை தண்ணீரில் சில துளிகள் சேர்த்து காலையில் உட்கொள்வது இந்த பிரச்சனைகளுக்கு எதிராக உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு, உணவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு கிராம் சாப்பிடுவது நல்லது. இது செரிமான சக்தியை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
முகத்தில் உள்ள புள்ளிகள் , கரும் புள்ளிகள் நீக்க கிராம்பு உதவுகிறது. கிராம்பு பொடியுடன் உளுத்தம்பருப்பு மற்றும் தேன் கலந்து இதை செய்யலாம்.
பிறகு, இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவலாம். ,முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும். இருப்பினும், கிராம்பு பொடியை நேரடியாக முகத்தில் தடவ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் சூடான தண்ணீரில் கிராம் போட்டு கொதிக்க வைத்து ஆறியதும் தலையில் மாஸ்க் போட்டுவந்தால் முடி உதிர்வது குறையும். கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவினாலும் நல்லது. மசாஜ் செய்யலாம். இது முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -