Aloe Vera : இந்த எல்லா விஷயத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுமா?
கற்றாழை எல்லா பருவகாலங்களிலும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் ஒன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎவ்வித கூடுதல் மெனக்கெடலும் இல்லாமல் வளர்க்கக் கூடிய செடி வகைகளில் ஒன்று... இதற்கு பல மருத்துவ குணங்களும் உள்ளன.
கற்றாழையில் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
கற்றாழை தோல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்கிறது
கற்றாழையின் பல நன்மைகள் தோலுடன் தொடர்புடையவை. 12 வாரங்கள் தொடர்ச்சியாக கற்றாழைச் சாறைத் தடவிவரும் நிலையில் அது 46 வயதிற்குட்பட்ட ஆண்களின் தோலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் சிகிச்சையாகப் பலனளிக்கலாம்
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
கற்றாழை சாறு அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கற்றாழை சாற்றில் ஆந்த்ராகுவினோன் கிளைகோசைடுகள் உள்ளன.
இவை மலப்போக்கை இளகவைக்கும் விளைவுகளைக் கொண்ட தாவர கலவைகளைக் கொண்டுள்ளன மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -