Gingelly Oil : அடடே..நல்லெண்ணெயில் இத்தனை பயன்கள் உள்ளதா?
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளன.
நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்கலாம். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்வதாக சொல்லப்படுகிறது
தினசரி, இரண்டு ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை, வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் கொப்பளித்தால் பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்
நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கல் உப்பு கலந்து, இதை வெடிப்புகளின் மீது தடவி வந்தால் பாதம் மென்மையாக மாறலாம். நல்லெண்ணெயை ஊற்றி மசாஜ் செய்தால் மூட்டு வலி குறையலாம்.
வாரம் ஒரு முறை உடம்பில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சோர்வும் மன அழுத்தமும் குறையலாம்.
நல்லெண்ணெயில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்துகள் நிறைந்த மற்ற உணவுகளோடு நல்லெண்ணெயை சேர்த்து சமைப்பதன் மூலம் எலும்புகள் வலுப்பெறலாம்.