Lemon Peel : எலுமிச்சை தோலை இனி தூக்கி போடாதீங்க..இப்படியெல்லாம் பயன்படுத்துங்க!
எலுமிச்சை தோலை பல வகைகளில் பயன்படுத்தலாம். நிறைய இருந்தால் அதை வைத்து ஊறுகாய் செய்ய முடியும். ஒன்றிரண்டு இருந்தாலும், அதை வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎலுமிச்சை தோல் இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும். காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படும் கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்ய எலுமிச்சை தோலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் பாத்திரம் கழுவும் சிங்க், முகம் கழுவும் சிங்க் போன்றவற்றை எலுமிச்சை தோல் வைத்து தேய்த்து சுத்தம் செய்தால் பளபளவென ஜொலிக்கும்.
மைக்ரோவேவ் ஓவனில் எலுமிச்சை தோலை போட்டு, ஹீட் செய்தால் கெட்ட வாடை நீங்கிவிடும். பிறகு ஒரு ஈர துணியை வைத்து துடைத்தால், மைக்ரோவேவ் சுத்தமாகிவிடும்.
டீ, காபி போடும் பாத்திரங்களில் கடினமாக கரை பிடித்திருக்கும். அவற்றை போக்க எலுமிச்சை தோலை ஏதேனும் டிஸ்வாஷ் லிக்விட் உடன் சேர்த்து தேய்த்தால் விடாப்பிடி கரை எளிதில் நீங்கிவிடும்.
காப்பர் பாத்திரங்களில் ஏற்படும் கறைகளை எலுமிச்சை தோல் கொண்டு நீக்கலாம். சோப், பேக்கிங் சோடா காட்டிலும் எலுமிச்சை தோல், நல்ல பலனளிக்கும். எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து சுத்தம் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -