Summer Tips : வெயில் நேரத்தில் வெளியே போறீங்களா? இதை செய்யாமல் போகாதீங்க!
ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் கையில் தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள். பாட்டிலை வெயிலில் படாத வாறு வைக்கவும். முடிந்தவரை ஒரு துணியால் பாட்டிலை சுற்றி வைத்தால் கொஞ்ச நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெளியே சென்றால் சூடான டீ, காஃபி மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது. பாட்டிலில் இருக்கும் குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு, மோர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
கோடையில் காற்றோட்டமான ஆடைகளை அணிவது அவசியம். வெளியில் செல்லும் போது க்ளவுஸ், கேப், கூலிங் கிளாஸ், ஷால் போன்றவற்றை அணியவும். சன்ஸ்கிரீன் தடவி விட்டு பாதுகாப்பாக செல்லவும்.
வெயில், சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ அணிவது நல்லது தேர்வாக இருக்கும். செருப்பு அணிந்தால், சாக்ஸ் அணியவும்.
வெயில் காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்காது. அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் சாப்பிட பிடிக்காது, சாப்பிட்ட பின்னும் மந்தமாக இருக்கும். இதுபோன்ற நேரத்தில் அதிக மசாலா நிறைந்த உணவுகள், நீண்ட நேரம் ஜீரணமாகும் உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -