Beetroot Rasam : பீட்ரூட்டில் ரசமா? சத்தான இந்த டிஷ்ஷை எளிதாக செய்துவிடலாம்!
ABP NADU | 01 May 2024 07:10 PM (IST)
1
தேவையான பொருட்கள் : 1 பீட்ரூட்,1 தக்காளி, 1 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு, 2 பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை
2
செய்முறை : பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு தக்காளி,பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
3
மிக்ஸியில் அரைத்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
4
பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இந்த தாளிப்பை ரசத்தில் சேர்க்கவும்
5
அடுப்பிலிருந்து இறக்கி, பொடியாக நறுக்கிய மல்லி இலையை தூவிவிடவும்
6
அவ்வளவுதான் எளிதில் தயாராகிவிட்டது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம்.