Beetroot Cutlet Recipe: சத்தான சுவையான பீட்ரூட் கட்லட்..ரெசிபி இதோ..!
பெரியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் விரும்பும் ஸ்நாக்ஸ் வகையில் ஒன்று கட்லட். அதுவும் சத்தானதாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி தானே..இதோ இந்த சுவையான பீட்ரூட் கட்லட்டை வீட்டில் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: பீட்ரூட் - 2, முந்திரி பருப்பு, திராட்சை, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, வேகவைத்த உருளைக்கிழங்கு - 5, வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி இலை, மைதா - 2 மேசைக்கரண்டி, தண்ணீர், பிரட் தூள், எண்ணெய்.
செய்முறை: முதலில் பீட்ரூட்டை துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும். இதில் வெங்காயம் பச்சை, மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின், பச்சை வாசனை போனபின் இதில் துருவிய பீட்ரூட்டை போட்டு வதக்கவும்.அதன் பிறகு இதில் உப்பு, சீரக தூள், கரம் மசாலா, சாட் தூள் சேர்த்து கிளரவும்.
அடுத்து இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மசிக்கவும்.மசித்த கலவையில் வேகவைத்த பச்சை பட்டாணி, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
கலவையை கையளவு வடை போல் தட்டவும்.பிறகு மைதாவை தண்ணீர் ஊற்றி கரைத்து செய்த கட்லெட்களை மைதா கலவையில் முக்கி ப்ரெடிதூள்லில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.
இறுதியாக பேன்னில் எண்ணெய் ஊற்றி செய்த கட்லெட்டுகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவ்வளவு தான் பீட்ரூட் கட்லெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -