World Enviromental Day : சுற்றுச்சூழலை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
காற்று மாசடைவதை குறைப்பதற்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது சைக்கிளில் பயணம் செய்யலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் இடத்திற்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம்.
நீர், மனித வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றாகும். நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதே சமயம் மாசடையாமலும் பாதுகாக்க வேண்டும். குப்பைகளை ஏரி, குளங்கள், கால்வாய்களில் தூக்கி எரிவதை தவிர்க்க வேண்டும்.
மரங்கள் நட வேண்டும். அதிகமாக மரம் நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை சமநிலையில் வைக்கலாம். மரங்கள் சுத்தமான ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை நமக்கு வழங்குகிறது. அதே போல் நிலத்தின் தன்மையையும் பாதுகாக்கிறது.
முடிந்த வரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது சுற்றுசூழலை பாதுகாக்கும். ஷாப்பிங் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும். உங்களுடன் சில்வர் பாட்டில் அல்லது செம்பு பாட்டில்களை வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் இதில் பிடித்துக்கொள்ளலாம்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போலவே சுற்றி இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு குப்பைகளையும் கழிவுகளையும் குப்பை தொட்டியில் போட வேண்டும். நாம் செல்லும் வழியில் குப்பை கிடந்தாலும் அதனை எடுத்து குப்பை தொட்டியில் போடலாம்.
சுற்றுச்சூழலை காப்பது நமது வேலை இல்லை நம் கடமை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!!