Tender coconut kulfi recipe : கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இளநீர் குல்ஃபி செய்வது எப்படி?
கோடை கால வெப்பத்தை சமாளிக்க குளிர்பானங்கள் குடித்து உடல் சூட்டைத் தணிப்பதற்கு பதிலாக இயற்கை முறையில் செய்யப்பட்ட இளநீர் குல்ஃபி செய்து சாப்பிட்டு மகிழலாமே!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : 200 எம்.எல் இளநீர், 1 கரண்டி கண்டன்ஸ்டு மில்க், கால் லிட்டர் பால், 100 கிராம் சர்க்கரை, ஏலக்காய் தூள் சிறிதளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா.
செய்முறை : முதலில் பாலை 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். பிறகு கண்டன்ஸ்டு மில்க்கை அதனுள் ஊற்றி, அதன் பின் ஏலக்காய் தூள் சிறிதளவு, முந்திரி, பாதாம், பிஸ்தாக்களை தூவி 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பிறகு இளநீரை அதனுள் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இந்த கலவை நன்றாக ஆறிய பின் குல்ஃபி அச்சுகளில் ஊற்ற வேண்டும்.
அதன் பின் அந்த அச்சுகளில் ஐஸ்க்ரீம் குச்சிகள் இட்டு பாயில் பேப்பரால் சுற்றி விட வேண்டும்.
பிறகு கலவை ஊற்றப்பட்ட அச்சுக்களை ஃப்ரீஸருள் 6 முதல் 8 மணி நேரம் வைத்துவிட வேண்டும். அதன் பின் வெளியே எடுத்து அச்சினை ஓடும் தண்ணீரில் நனைத்து பிறகு வெளியே எடுத்தால் சுவையான இளநீர் குல்ஃபி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -