Summer Fruits: சுட்டெரிக்கும் வெயில் - கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் என்னென்ன?
கிர்ணி பழம் அல்லது முலாம் பழம் என அழைக்கப்படும் இப்பழம் குடல் நலத்தை மேம்படுத்துவதோடு நம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெரிப் பழங்கள் ஆண்டிஆக்ஸிடண்ட்டில் சிறந்தவை, அதே போல தான் எந்த ஸ்ட்ராபெரிக்களும். இதன் சுவைக்கு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனவரும் ரசிகர் தான். ஸாலட், சாண்ட்விட்ச், கேக், ஜீஸ் அல்லது ஸ்மூத்தி என பல வடிவங்களில் பருகலாம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து தரும் ஃபோலேட்கள் மற்றும் மேன்கனீஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
கோடைக் காலம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பழம் தர்பூசணி தான். வெயில் காலத்தில் உட்கொள்ள சிறந்த ஒரு பழமாக இது திகழ்வதன் காரணம் அதன் நீர்ச்சத்து தான்.
வைட்டமின் ஏ, கே போன்ற முக்கிய வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றுடன் சேர்ந்து 92% நீர்ச்சத்து கொண்ட பழம் இது.
தக்காளி பழம்தான். லைகோபின் பிக்மெண்ட் கொண்ட இன்னொரு பழம் இது. இந்த லைகோபின் பிக்மெண்ட் தான் தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை தருகிறது. நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கும் ரேடிக்கல்ஸை எதிர்ப்பதோடு பல நோய்களை தவிர்க்கவும் செய்கிறது.
கோடையில் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் சிட்ரஸ் பழங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது ஆரஞ்சு பழம் தான். அதீத உடல் வெப்பத்தால் வியர்வையின் மூலம் அதிகளவில் பொட்டாஸியம் வெளியேறும். இது சதைப் பிடிப்பை ஏற்படுத்தலாம். ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி மட்டுமின்றி பொட்டாஸியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உண்டு. இதன் நீர்ச்சத்து நம் உடம்பில் நீரேற்றத்தை ஏற்பத்துகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -