Doodh soda recipe : புரட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக வீட்டிலேயே செய்து அருந்துங்கள் புதுமையான தூத் சோடா!
ABP NADU | 19 Apr 2023 06:34 PM (IST)
1
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? ஓரே விதமான குளிர்பானங்கள் அருந்தி சலித்து விட்டதா? இதோ இந்த தூத் சோடா உங்களுக்காக..
2
தேவையான பொருட்கள் : பால் 500 மிலி, ரோஸ் சிரப் 80 மிலி, ஐஸ் கட்டிகள், சோடா 150 மிலி.
3
செய்முறை : முதலில் ஒரு ஜார் எடுத்து கொள்ளவும். அதில் பால் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4
பிறகு ஒரு கிளாசில் ஐஸ் கட்டிகள் மற்றும் கலந்து வைத்த பாலை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
5
இறுதியாக சோடா சேர்த்து மீண்டும் நன்றாக கலந்தால், தூத் சோடா தயார்.
6
இது குளிர்ச்சியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.