Bad Breath : பக்கத்தில் யாரும் வராத அளவிற்கு வாய் துர்நாற்றம் அடிக்குதா? பிரச்சினையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு விஷயம்தான். இதனால் மற்றவர்களிடம் நெருங்கி பேசுவது தயக்கமாக இருக்கும், தன்னம்பிக்கை குறையும். இந்த பிரச்சினையை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
1.ஏலாக்காயை உரித்து அதன் விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளை சாப்பிட்டால் உடனடியாக சுவாசம் ப்ரெஷ்ஷாகும்.
2.தண்ணீரில் சிறிது இந்துப்பு மற்றும் புதினா எண்ணெயை கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்
3. பெருஞ்சீரகம், ஓமம், தானிய தால் ஆகியவற்றை நன்றாக வறுத்து அறைக்கவும் இதனுடன் பனை சர்க்கரை, குல்கந்த் சேர்க்கவும்.இந்த கலவையை 1 ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் போகும்.
4.வெற்றிலையில் எலுமிச்சை தடவி அதனுடன் முன்குறிப்பிட்ட குல்கந்த் கலவையை சேர்க்கவும் அதனுடன் காய்ந்த திராட்சை, செர்ரி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்
டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து, குடலை சுத்தமாக வைப்பது மிக மிக அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்